முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியினை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட சந்தேகநபர்களை மடக்கிப்பிடித்து பிரதேச மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (02) காலை இடம்பெற்றுள்ளதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சிறு கடை ஒன்று வைத்து வாழ்வாதாரம் மேற்கொண்டு வரும் பெண் ஒருவரின் கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கத்தியினை காட்டி குறித்த பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது, கிராம மக்களால் சந்தேகநபர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் நேற்று முன் தினமும் மூன்று பேர் கொண்ட இந்த கொள்ளைக்கும்பல் ஒன்று சுதந்திரபுரம் கிராமத்திற்குள் வந்து கடை ஒன்றில் கத்தியினை காட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்றும் இவ்வாறு கத்திமுனையில் பணப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை மக்கள் பிடிக்க முற்பட்ட போது ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருவரை மக்கள் பிடித்துள்ளார்கள்.