யாழில் இளம் குடும்பஸ்தர் மீது பட்டப்பகலில் வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி சிறுப்பிட்டிப் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளனர்.

நேற்று முந்தினம் (01) பகல் வேளையில் இடம்பெற்ற குறித்த இவ்வாள் வெட்டு சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார்.

இந்த நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரை விரட்டிச் சென்று நேற்றுப் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய நபர் சிறுப்பிட்டி வைரவர் கோயிலுக்குள் புகுந்த போதும் அங்கு வைத்தும் அவரை வாளால் வெட்டி விட்டு குறித்து கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *