திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமண் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (01.10.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கிண்ணியா இடிமண் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு(01) புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது 6 பேர் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சொகுசு வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி ஒன்றில் வேட்பாளராக களமிறங்கிய பெண் ஒருவரின் வீட்டில் புதையல் தோண்டுவதற்கான பூசை நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் நேற்றையதினம் (02.10.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்