திடீரென விமானத்துக்குள் நுழைந்த நபரால் கட்டுநாயக்கவில் பரபரப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமான முறையில் உட்பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த நபர் ஒருவர் பாதுகாப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா நேற்று(01.10.2023) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வத்தளை, ஹெந்தலையைச் சேர்ந்த ஏ.பி.சுதாகர் இந்திரஜித் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் ஜப்பானில் சில காலம் பணியாற்றிய பின்னர் திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்தவர் எனவும், பின்னர் ஜப்பான் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம்(30.09.2023) வீட்டை விட்டு வெளியேறியவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரிடம் ஜப்பான் செல்வதற்கான ஆவணம் எதுவும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *