உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர பலி!

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் விபத்துக்குள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த இச்சம்பவம் நேற்று (01.10.2023) காலை 11.30 மணியளயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சுந்தரலிங்கம் சுந்தரவதனன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *