திருகோணமலை- தம்பலகாமம் வைத்தியசாலையில் தீப்பரவல்!

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இன்று காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை  தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *