ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரித்துள்ளது. மேலும் கட்டணம் செலுத்தி பார்க்கும் ஆபாச தளங்களில் காணப்படும் வீடியோக்களிலும் ஆபாச வீடியோக்களிலும் சமீப காலங்களில் இலங்கையர்கள் அதிகளவு காணப்படுகின்றனர்.
அவற்றில் சில வீடியோக்களில் இலங்கையை சேர்ந்த ஆபாச பட நடிகைகள் நடித்திருக்கலாம். ஏனைய வீடியோக்கள் குறிப்பிட்ட நபர் அல்லாத மூன்றாம் தரப்பு நபர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
இலங்கை பெண்களை அடிப்படையாக கொண்ட ஆபாச பட இணையத்தளங்கள் இலங்கையில் செயற்படுகின்றன.
இந்நிலையில் குறிப்பிட்ட வீடியோக்களில் காணப்படுபவரின் சம்மதம் இன்றி அவை பதிவு செய்யப்பட்டு மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது.
மேலும் சிலவேளைகளில் பழிவாங்கும் நோக்குடன் சர்வதேச இணையத்தளங்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் வெட்கம் மற்றும் சமுகத்தின் பேச்சுக்கு பயந்து இவ்வாறான ஆபாச வீடியோக்கள், படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய வருவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையான இருக்கிறது.