அமெரிக்க அரசு முடங்குவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் அரசு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான காலக் கெடு நேற்று நள்ளிரவுடன் அமெரிக்க காங்கிரஸ் அவை இழக்கும் தருவாயில் உள்ளது .
அமெரிக்க அரசிடம் பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை நேற்றுடன் காலியாகியுள்ளது. இந்நிலையில் புதிதாக நிதி அனுமதிக்கப்படாதபட்சத்தில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பணிகள், அலுவலகங்கள் இன்று ஒக்டோபர் முதலாம் திகதி முதல் முடங்குவதற்கான அபாயங்கள் அதிகரித்திருக்கின்றன.
இதற்குக் காரணம், நவம்பர் 17ஆம் திகதி வரை அரசுக்கு நிதி வழங்கும் இடைக்கால மசோதாவை செனட் அவை அங்கீகரித்திருந்த போதிலும், குடியரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக மக்களவைத் தலைவர் கெவின் மெக்கார்தி கூறியுள்ளார்.
ஒருவேளை, அந்த இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசு முடங்கும் அபாயத்துடன், அது உலக அளவில் பொருளாதார சந்தைகளை பாதித்து, அதன் மூலம் பல்வேறு நாடுகளின் உள்நாட்டுச் சந்தைகளில் கேள்வி எழும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் அமெரிக்க அரசு, நிதிப்பற்றாக்குறையால் முடங்குவது இது நான்காவது முறை இந்நிலையில் ஒருவேளை, அமெரிக்க அரசு நிதியின்றி முடங்கினால், அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது, விமான சேவை முதல் பலவும் முடங்கும் நிலை ஏற்படும்.