பொரலஸ்கமுவ – பெல்லன்வில, மகரகம வீதி பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இச்சடலம் நேற்று (30.09.2023) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொரலஸ்கமுவ – மதிசுத்தகர வெரஹெர வீதி வல்லஹா கொடவத்த முதியன்செல என்ற இடத்தில் வசிக்கும் 62 வயதுடைய மோனிகா நாம என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கால்வாய் அருகில் அவரது தோள் பை ஒன்றும், தேசிய அடையாள அட்டை , பற்றுச்சீட்டும் பழைய ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நுகேகொட பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன சென்று பார்வையிட்டதுடன், சடலத்தை களுபோவில பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்