வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வனர்த்தத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாக சர்வதேச ஊடகங்களில் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.