காலி கடலில் நீராடச்சென்ற 14 வயது சிறுவன் காணவில்லை: தீவிர மீட்பு பணியில் கடற்படையினர்!

காலி – கொக்கல பகுதி கடலில் நீராடச்சென்ற 14 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரகாபொலவில் இருந்து சுற்றுலா சென்று கொக்கல முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு நேற்று (29.009.2023) மாலை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரகாபொல, மில்லகஹதொல, கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கடற்படை வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்த மாணவன் ஒருவரும் இந்த இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இதேவேளை, நேற்று பிற்பகல் கொக்கல கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவரும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறான பாதுகாப்பற்ற இடங்களில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை நீராட அனுமதிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *