சீனாவின் 74வது தேசிய தின கொண்டாட்டத்தில் இலங்கையின் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கான சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த 74வது சீன தேசிய தின விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கையை வறுமைப் பொறியில் இருந்து விடுவித்து அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார்.