ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி தெஹிவளையிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இலவசமாக அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தினத்தன்று தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது