இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்துசேர்ந்தனர்.
இருப்பினும் அப்போது, அந்த வீட்டில் பெண் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்ததாகவும் சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.