தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை உயர்வடையலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இத் தாக்குதல் தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாம் என அந்நாடு பொலிஸார் சந்தேகிக்கின்றதுடன் இத்தாக்குதலுக்கு இதுவரை இந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்