பாகிஸ்தானில் கண் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுமார் 56,000க்கும் அதிகமான பாடசாலைகள் இவ்வாரம் முழுவதும் மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கண் தொற்றுநோய் காரணமாக கண்கள் சிவந்து போதல், கண்களில் அரிப்பு ஏற்படுவதல், கண்களிலிருந்து நீர் கசிவதல், ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் சளி இருமல் வழியாக இந்த வைரஸ் பரவுகிறது என தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவும் இந்த வைரஸுக்கு எதிராக மாணவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இவ்வாறு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.