நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று(28.09.2023) முதல் ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் போது பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *