பொலனறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்ளை விற்பனை செய்த 24 வயது இளைஞர் ஒருவர் கணணி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் குறித்த பிரிவின் சமூக ஊடகப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிவரதாரிய என்பவருக்கு ஆபாசமான காட்சிகளை விற்பனை செய்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் இருந்து 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய சுமார் 7000 படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேக நபர் பொலனறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.