கல்கமுவ – அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ளன.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.
குறித்த விபத்து காரணமாக ரயில் எஞ்சினில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ரயில் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.