நாட்டை உலுக்கிய படுகொலை : 8 பேருக்கு மரண தண்டனை!

தென்னிலங்கையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்த குற்றவாளிகள் எட்டுப் பேருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று புதன்கிழமை (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு அண்மைய தினம் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் படுகொலை செய்தவர்களுக்கு நேற்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களையும் குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று 08 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

மொஹமட் பாரிஸ் என்பவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *