காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவதினம் அண்ணன் திட்டியதால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு இவ்வாறான விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தம்பியை நீண்ட நேரம் காணாத நிலையில், அண்ணன் அவரை தேடிய நிலையில் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக பட்டபொல வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டதுடன், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.