மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜயந்திபுர பிரதேசத்தில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (26.09.2023) இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டபோது அதை தடுக்க முற்பட்ட தாயாரின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைதி செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.