‘லியோ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா இரத்து!

நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இருப்பினும் தற்போது நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 
‘லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல’ என அதில் பதிவிடப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *