ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (27) அதிகாலை புறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியில் இடம்பெறும் பேர்லின் பூகோள கலந்துரையாடலில் பங்கேற்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் நோக்கம் எனவும், கலந்துரையாடலின் முதல் நாள் தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.