நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுள் 06 பதிவுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மொனராகலை – புத்தல பிரதேசத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், இது பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.4 அலகுகளாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் புத்தல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல தடவைகள் லேசான நில அதிர்வுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.