பதுளை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரையை அடுத்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்படி தோட்டத்துக்கு பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின் ஒழுக்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றை சீர் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதிநிதிகள் குழு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தங்குமிட வசதி, உணவு மற்றும் மருத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
அத்துடன், அவர்களுக்கான மாற்று இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு அறிக்கையொன்றையும் கையளிக்கவுள்ளது. குறித்த இத்தீ விபத்தால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் வீடு மற்றும் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பற்ற மின்கம்பங்கள் மின் ஒழுக்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றை சீர் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது