முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயி ஒருவரால் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழந்துள்ளது.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் கிராமத்தினரால் வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது காட்டுயானை உயிரிழந்தமைக்கான காரணத்தினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவ குழுவினர் கடந்த 24ம் திகதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் மின்சாரம் தாக்கியே யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து யானையின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது
மேலும் யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் முத்தையன் கட்டு மூன்றாம் கண்டம், கனகரத்தினபுரம், மன்னாகண்டல் பகுதிகளில் தற்போது காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது