அவிசாவளை துப்பாக்கிச்சூட்டு இரட்டைப்படுகொலை: ஊடகவியலாளர் உட்பட நால்வர் கைது!

அவிசாவளையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இரவு, கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு ஓட்டோவில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்குத் தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு முச்சக்கரவண்டி மூலம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமை , உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார் என்றும் அவர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *