2023 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான பெயரிடப்பட்ட இலங்கை அணி விளையாட்டு வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி, தசுன் ஷனக தலைமையிலான குழாமில் 17 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குசல் மென்ட்ஸ், குசல் ஜனித், பதும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, சரித் அசங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, கசுன் ராஜித, துனித் வெல்லலகே, மதிஷ பத்திரன, லஹிரு குமார ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் உடற்தகுதி அடிப்படையில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதுடன் மேலதிக வீரர்களாக சாமிக்க கருணாரத்ன, துஷான் ஹேமந்த ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.