மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி!

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கு அவசியமான பாடப்புத்தகங்களில் 50 வீதமானவை அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் பாடப்புத்தகங்களை அச்சிடும் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *