வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று (26) முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பிக்கப்பட உள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இணையவழி முறையிலான வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று (26) முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் மேல்மாகாண வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படாமல் புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.