கடற்கரையில் மீட்க்கப்பட்ட சிசுவின் சடலம் – பின்னணியில் 6 பிள்ளைகளை பெற்ற தாய் கைது!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய நேற்று(24) சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கிடந்த சிசுவின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரசவித்த குழந்தை இன்றி வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்த பெண்ணை ஹலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலாபத்தில் வசிக்கும் 36 பெண் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பெண் குழந்தை பிறக்க உள்ளதாகவும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக வீடு திரும்பியதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் தேடுதல் வேட்டையின் பின்னர் சந்தேக நபரை  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பெண் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், ஆனால் அவர்கள் யாரும் அவருடன் வாழவில்லை என்பதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னரே 6வது குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

குழந்தை தொடர்பில் குறித்த பெண் எவ்வித வாக்குமூலமும் வழங்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பெற்றெடுத்த குழந்தை காணாமல் போனமை தொடர்பில் சிலாபவம் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *