நுவரெலியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் நேற்று முன்னிரவு (23.09.2023) அந்தக் கட்டடத்தின் முதலாவது மாடியில் இருந்து குறித்த ஊழியர் தவறி கீழே விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்ட 59 வயதான சுப்பிரமணியம் வடிவேலு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் மரண விசாரணைகளின் பின்னரே சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.