பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனொருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த மாணவன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாணவர்களுடன் தங்கியிருந்த நிலையில், மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.