கொழும்பு தேசிய வைத்தியசாலையில், வைத்தியசாலை உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம், சீன அரசினால் உருவாக்கப்பட்ட புதிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் உள்ளடக்கிய அடுக்குமாடி கட்டடத்திலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிசிரிவி கமராக்களில் பதிவாகிய காட்சிகளை சாட்சியமாக வைத்து விசாரித்த போதே குறித்த நபரை அடையாளம் காண முடிந்தது என பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.