கம்பளை, ஜயமாலபுர பகுதியில் இன்று(24) பேருந்து ஒன்றை வழிமறித்து சாரதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கடத்தல் சம்பவத்தில் வேன் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று, இன்று காலை 6 மணியளவில் கம்பளையிலிருந்து மாவெல பகுதியை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றை வழிமறித்து சாரதியை ஆயுதமொன்றினால் தாக்கி அவரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் வத்தேகம பிரதேசத்தை சேரந்தவர் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.