ஆழ்கடல் ஆராய்ச்சியில் ‘மத்ஸ்யா 6000’ : இந்தியாவின் அடுத்த முயற்சி!

கடந்த சில மாதங்களுக்குள் வெற்றிகரமாக சந்திரயானை நிலவில் தரையிறக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-1 விண்கலத்தை அனுப்பியது.

இதனிடையே தற்போது சமுத்ராயன் மிஷனின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் “மத்ஸ்யா 6000” நீர்மூழ்கி கப்பலின் புகைபடங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இத்திட்டம் மீதான பெரும் எதிர்பார்ப்பை உலக நாடுகள் மத்தியில் தூண்டியுள்ளது.

கடலுக்கு அடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் இந்தியா ‘மத்ஸ்யா 6000’ எனும் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து வருகிறது.

ஆழ்கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் மதிப்பீடுகளுக்காக கடலுக்குள் 6000 அடி ஆழத்திற்கு மூன்று மனிதர்களை ஏற்றி செல்லும் ‘மத்ஸ்யா 6000’ எனும் நீர்மூழ்கி கப்பலை  இந்தியா தயாரித்து வருகிறது.

இதன் அனைத்து கட்ட பணிகளும் முடிந்த பின் 2026 ஆண்டு முடிவடைவதற்குள் மத்ஸ்யா 6000 இல் மனிதர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள நஷனல் இன்ஸ்டிடியூட் ஒப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) நிறுவனம் இந்தக் கப்பலை உருவாக்கி வருகிறது. இது கடலின் ஆழத்தை ஆராயும் “சமுத்ராயன்” திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும்.

உண்மையில், நீருக்கு அடியில் 6000 அடி வரை கோள வாகனத்தில் மனிதர்களால் பயணிக்க முடியும். இருப்பினும், முதல் நீருக்கடியில் உல்லாசப் பயணம் 500  அடி  நீளம் மட்டுமே இருக்கும். அதற்கு கீழே ஆய்வுகளுக்காக மட்டுமே அழைத்து செல்லப்படும் என்றும் இந்த ஆய்வுகள் எதுவும் கடல் வாழ்விடத்தையும், கடல்வாழ் உயிரினங்களை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *