தங்கொவிட்ட பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கொவிட்ட ஹெந்தலவில் இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருதுவத்த தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மண்மேட்டை வெட்டிக் கொண்டிருந்த போது சுமார் 15 அடி உயரத்தில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்து அதற்கு அடியில் புதையுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.