மன்னாரில் தீப்பரவல்: பல ஏக்கல் காடு தீக்கிரை!

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தாமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீபரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.

இவ்வனர்த்தம் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அனைத்திலும் தீ பரவிய நிலையில் அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து வீசிய காற்று காரணமாக அருகருகில் இருந்த காடுகளுக்கும் தீ பரவல் ஆரம்பித்துள்ளது. இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் கடற்படையின் கடும் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உரிய தீயணைப்பு பிரிவு காணப்படாமையினால் வவுனியா தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அனைத்து எரிந்து அனையும் வரை தீயணைப்பு சேவை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *