பங்களாதேஷிடம் இருந்து கடனாக பெறப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் கடைசி தவணையை இலங்கை மீளச் செலுத்தியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த கடனின் இறுதி தவணை தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.