பாடசாலை பாடப்புத்தகம் மற்றும் சீருடை விநியோகம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னரே அடுத்த வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்குரிய பாடப்புத்தகங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே சீருடை துணிகள் வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுகளையும் வன்மையாக கண்டிப்பத்தாகவும், சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும் வழமை போன்று தாமதமின்றி வழங்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த உறுதியளித்தார்.

அத்துடன் இந்த அனைத்து பௌதீக வசதிகளையும் வழங்குவதற்கான எதிர்பார்ப்பு மற்றும் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்வது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவிற்கு வரும் எனவும் கொவிட் 19 தொற்றுநோய்களின் போது சீர்குலைந்த அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் மீட்டெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியை, குறைந்த செலவில், உரிய நேரத்தில் செய்து முடித்ததால், 4,000 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *