சாதாரணத் தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சையானது இன்னும் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *