கொழும்பு கண்டி பிரதான வீதியின் பெலும்மஹர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் மீது பேருந்து ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.