பலங்கொட, வெலிஹரனாவ பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன் குறித்த பெண் அடுக்குமாடி கட்டடத்தில் வாடகை அடிப்படையில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கட்டடத்தின் மேல் மாடியில் ஏறிய சந்தர்ப்பத்தில் தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.