இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகத நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னர் வேறு நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து வர்த்தகர் போன்று தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினரால் தேடப்படும் குறித்த சந்தேகநபர், இந்திய பாதுகாப்புப் படையினரையும், இந்திய நீதிமன்றங்களையும் தவிர்த்து தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.