இவரை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் பொலிஸார் அறிவிப்பு!

தனது 9 வயதான மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒரு சந்தேகநபரின் புகைப்படத்தை மாவத்தகம பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேடப்படும் சந்தேகநபர் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க, என்றும் அவர் 95/02, பிரியந்தி நிவாச, பபுராவ, வலஸ்முல்ல என்ற முகவரியில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவத்தகம பொறுப்பதிகாரிக்கு (OIC) 0372299222 அல்லது 0718591258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியுடன் 071859702 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தகவல்களைப் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *