ICC உலககிண்ண போட்டி பரிசுதொகை அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 2023 ஒரு நாள் ஆடவர் உலகக் கிண்ணத்திற்கான பரிசுத் தொகையினை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதன்படி, இதற்கான மொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று செப்டெம்பர் 22 அறிவித்துள்ளது. இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்பவர்கள் மொத்த பரிசுத் தொகையில் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள்.

ரன்னர்-அப்பிற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். 2023 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 10 அணிகளும் முதல் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் ஏனைய அணிகளை ஒரு முறை எதிர்கொள்ளும்.முதல் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் சுற்றில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று முடிவில் நாக் அவுட்களை அடையத் தவறிய அணிகள் ஒவ்வொன்றும் தலா 100,000 அமெரிக்க டொலர்களை பெறும்.

அரையிறுதி சுற்றில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா 800,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

கடந்த ஜூலை மாதம் தென்னாப்பரிக்காவின் டர்பினில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்திர மாநாட்டின் போது, ஆண்கள் மற்றும் மகளிர் இருவருக்கும் சமமான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *