திருகோணமலை – சேருவில வாகன விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்!

திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் 56 வயதுடைய குலங்கமுவே கெதர குலரத்ண என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சேருவில – காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் அவருடன் சென்ற சக நண்பரை வீட்டுக்கு முன் இறக்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சக நண்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவித்த இடத்திற்கு சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச். குணரத்ன சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை காயமடைந்த மற்றுமொருவர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *