முல்லைத்தீவில் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட செயலமர்வு! (photos)

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (22) காலை 10 மணியளவில் குறித்த செயலமர்வு ஆரம்பமாகியிருந்தது.

குறித்த செயலமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் வளவாளராக பீற்றர் சேவியர் கலீஸ் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினார்.

மேலும் இச்செயலமர்வின் போது திடீர் அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளல், நீர் நிலைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளல், தீ விபத்து, அவசர தொலைபேசி இலக்கங்களின் பாவனை, சூழல்  போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் மேலாளர் கணபதி பிரசாத், இணைப்பாளர் திஷான் மதுஷனா மற்றும் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *