இலங்கைக்கு பத்து ரயில் இயந்திரங்களை வழங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இயந்திரங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன், இலங்கை ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று குறித்த இயந்திரங்களை தர சோதனை செய்ய உறுதிபடுத்திய பின்னரே நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ரயில் இயந்திரங்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாகவும் பழைய இயந்திரங்கள் பழுது சரிபார்த்து இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.